ஒன்றிய அரசின் விவசாயத் துறையின்கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆய்வு மையங்களில் உதவிப் பேராசிரியர், மூத்த தொழில்நுட்ப அலுவலர் மற்றும் விவசாய ஆய்வு விஞ்ஞானி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புகிறார்கள். மூன்று பணியிடங்களிலும் மொத்தம் 582 இடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியிருக்கிறது.
வயது வரம்பு - உதவிப் பேராசிரியர் மற்றும் மூத்த தொழில்நுட்ப அலுவலர் ஆகிய இரண்டு பணியிடங்களுக்கும் 21 வயது முதல் 35 வயது வரையில் இருக்க வேண்டும். விவசாய ஆய்வு விஞ்ஞானிக்கு 21 வயது முதல் 32 வயது வரையில் இருக்க வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி உச்சபட்ச வயதில் தளர்ச்சி வழங்கப்படும்.
முதுநிலைப்படிப்பில் என்னென்ன பாடப்பிரிவுகளில் படித்திருந்தால் இந்தப் பணியிட நிரப்புதலுக்கு தகுதி என்பது பற்றிய விபரங்கள் இணையதளத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. அந்தப் பாடப்பிரிவுகளைப் படித்திருப்பதோடு, நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு நிலைகளில் தேர்வு முறை இருக்கும். இதில் முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் நடைபெறும். முதன்மைத் தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும்.
இந்த அறிவிக்கை குறித்த முழு விபரங்களை www.asrb.org.in என்ற இணைய தள முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் நிரப்புவதற்கான கடைசித் தேதி மே 21, 2025 ஆகும்.
No comments:
Post a Comment