Showing posts with label ISRO CAREER. Show all posts
Showing posts with label ISRO CAREER. Show all posts

இஸ்ரோவில் விஞ்ஞானிகள் தேவை

பெரும் சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ(ISRO)வில் பொறியியல் பட்டம் படித்து விஞ்ஞானிகளாகப் பணிபுரிவதற்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 63 இடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்திருக்கிறது.

பணியிடத்தின் பெயர் - விஞ்ஞானி/பொறியாளர் (Scientist/Engineer)

சம்பளம் - மாதம் ரூ. 56,100 

வயது வரம்பு - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஒன்றிய அரசின் விதிகளின்படி தளர்ச்சி உண்டு.

கல்வித்தகுதி - பொறியியல் பட்டப்படிப்பில் எலக்ட்ரானிஸ்/தகவல் தொடர்பு, மெக்கானிக்கல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில்(B.E., B.Tech.,) குறைந்தபட்சம் 65 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

GATE 2024-25 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் வினாக்கள் எழுப்பப்படும். இந்தத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

இந்த அறிவிக்கை தொடர்பான முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு ஆகியவற்றைப் பெற www.isro.gov.in என்ற முகவரியை நாடலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 19, 2025 ஆகும்.